தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் ஆன்லைன் வகுப்பு தொடர்பாக வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, September 6, 2020

தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் ஆன்லைன் வகுப்பு தொடர்பாக வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள்

தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் ஆன்லைன் வகுப்பு தொடர்பாக வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள்

பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி அல்லது வகுப்பு என்பது கட்டாயம் இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் ஆன்லைன் வகுப்பு தொடர்பாக வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள்:

* ஆன்லைன் வகுப்புகளில் வருகைப் பதிவு, செயல்திறன் மதிப்பீட்டு நோக்கங்களுக்காக  கணக்கிட மாட்டாது.

பள்ளிகள் திறக்கும் போது, ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளாத மாணவர்களுக்கும், கலந்து கொண்ட மாணவர்களுக்கும் பாடங்கள் மற்றும் பயிற்சியை அளிக்க மீண்டும் கூடுதல் வகுப்புகள் நடத்த வேண்டும்.

* மாணவர்கள் தங்கள் வீட்டு பெற்றோரால் மேற்பார்வை செய்யப்படாத நிலையில் ஆன்லைன் வகுப்புக்காக எந்த ஒரு சாதனத்தையும் குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ள பெற்றோர்  அல்லது பாதுகாவலரை கட்டாயப்படுத்தக் கூடாது.

* வருகைப்பதிவேடு, மதிப்பெண் மதிப்பீடு ஆகியவை அவசியம் போன்ற சொற்களை பயன்படுத்தி ஆன்லைன் வகுப்பில் மாணவர்களை கலந்து கொள்ள வற்புறுத்தக் கூடாது.

* இதுபோன்ற செயலால் குடும்பம் அல்லது சமூகத்தில் எதிர்பாராத மோதல்கள், அல்லது விளைவுகள் ஏற்பட்டு குழந்தைகளுக்கு மன அழுத்தம் போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும்.

* ஆன்லைன் வகுப்பு எடுப்போர், அதிகாரிகள், ஆசிரியர்கள் வகுப்பு தொடர்பான அறிவிப்பின்போது,  வாய்மொழியாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ மாணவர்களை கட்டாயப் படுத்த கூடாது.

* ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் இணைய வழி வகுப்புகள் நடந்தால், அவர்களுக்கு சாதனங்களின் பற்றாக்குறை ஏற்பட்டால், மூத்த குழந்தை அந்த சாதனத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்ற ஒரு நெறிமுறையை பின்பற்றலாம்.

* மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இணையம் அல்லது ஆன்லைன் குறித்து பாதுகாப்பை உறுதி செய்ய  ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசிரியரை ஆலோசகராக நியமிக்க வேண்டும். ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாக இந்த ஆலோசகரின்  தொடர்பு எண்கள் வழங்கப்பட வேண்டும்.

* ஆன்லைன் மற்றும் இணைய வழி வகுப்புகள் தொடர்பாக ஏற்படும் பிரச்னைகளை தீர்க்கும் வகையில் ஆலோசகர் செயல்பட வேண்டும்.

* எந்த பிரச்னையாக இருந்தாலும் குழந்தைகள் பெற்றோர், ஆசிரியர் அல்லது ஆலோசகர், நிர்வாகத்துக்கு தெரிவிக்கலாம். புகார் தீர்க்கப்படவில்லை என்றால் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு தெரிவிக்கலாம்.

* புகார்களை பெற மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம், grivancesredressaltnpta@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டுள்ளது.

* மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் ஆலோசகர்கள் எந்த ஒரு மன அழுத்தம் அல்லது பதற்றம் தொடர்பான ஆலோசனைகளை பெற பள்ளிக் கல்வித்துறையின், உதவிச் சேவை எண் 14417 ஐ எண்ணை பயன்படுத்தலாம

No comments:

Post a Comment