வீடு தேடி சென்று பாடம் நடத்தும் நீங்க நல்லா இருக்கோணும்! அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களுக்கு! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, September 6, 2020

வீடு தேடி சென்று பாடம் நடத்தும் நீங்க நல்லா இருக்கோணும்! அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களுக்கு!

 வீடு தேடி சென்று பாடம் நடத்தும் நீங்க நல்லா இருக்கோணும்! அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களுக்கு!

வீட்டுல உட்கார்ந்து, சொகுசா சம்பளம் வாங்கறாங்க' என இனி எவரும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது, வீண் பழி சுமத்த முடியாது. ஆசிரியர்கள் பலர் மாணவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று, பாடம் கற்பித்து வருகின்றனர். 

மனசாட்சியுடன் நடந்து கொள்ளும், ஆசிரியர்களின் இந்த முயற்சிக்கு, பெற்றோர் ஏகோபித்த ஆதரவும், வரவேற்பும் அளிக்கின்றனர்.ஊரடங்கால் பள்ளிகள் மூடிய பின், ஆரம்பத்தில் ஆசிரியர்கள் பலர், 'அப்பாடா...இப்பவாவது லீவு கிடைத்ததே' என ஆசுவாசப்பட்டனர். 

இதனால், வீட்டில் இருந்தபடி ஓசியில் சம்பளம் வாங்குவதாக சிலர், வலைதளங்களில் வீண் பேச்சு பேச ஆரம்பித்தனர்.இந்த வீண் பேச்சுக்களை, ஆசிரியர்கள் புறந்தள்ளினர். அதே வேளையில், வீட்டில் இருந்தபடி ஆசிரியர்களால் ஆன்லைன் வாயிலாக, முழுமையாக கற்பிக்க முடியவில்லை.

 ஏழை மாணவ மாணவியர் பலரிடம் ஆண்ட்ராய்டு போன் இல்லாததால், கற்பித்தலில் குறை நீடிக்கிறது.இரு மாதங்கள் கடந்த பின், பள்ளிச்சூழலுக்கு ஏங்க ஆரம்பித்து விட்டனர், அர்ப்பணிப்பு உணர்வுள்ள ஆசிரியர்கள் பலர். பள்ளிச்சூழல் கிடைப்பது இப்போதைக்கு சாத்தியமில்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டதால், மாணவர்களின் வீடு தேடி, சில ஆசிரியர்கள் செல்ல துவங்கி விட்டனர்.

துடியலுார், மேட்டுப்பாளையம், காரமடை, அன்னுார் பகுதி ஆசிரியர்களை தொடர்ந்து, இதோ கோவை வடவள்ளி அருகே உள்ள, சோமையம்பாளையம் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் களமிறங்கி விட்டனர்.

இது குறித்து, சோமையம்பாளையம் அரசுப்பள்ளி ஆசிரியர் கருப்புசாமி கூறியதாவது

ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன. இருப்பினும், மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க, ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் பலரிடம், ஆண்ட்ராய்டு மொபைல் போன் இல்லாததால், ஆன்லைன் வகுப்புகளில், அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


அனைத்து மாணவர்களுக்கும், கல்வி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், தலைமையாசிரியர் சித்ராதேவி அனுமதியுடன், மாணவர்களின் பகுதிகளுக்கு நேரடியாக சென்று, கோவில்கள், பொது இடங்கள், மரத்தடிகளில் பாடம் நடத்தி வருகிறோம்.


மாணவர்களுக்கு கிருமிநாசினி, முகக்கவசங்கள் வழங்கி, சமூக இடைவெளியுடன் உட்கார வைப்பதால், நோய்த்தொற்று பயம் இல்லை.தமிழக அரசால் வழங்கப்படும் இலவச பை, புத்தகங்கள், நோட்டுகள் வாங்காமல் உள்ள மாணவர்களின் வீடுகளுக்கு, நேரடியாக சென்று வினியோகித்து வருகிறோம். பெற்றோர்களும் நல்ல ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment