குஜராத்தில் தமிழ் பள்ளியை மூடுவதா? - டாக்டர் ராமதாஸ் கண்டனம் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, September 23, 2020

குஜராத்தில் தமிழ் பள்ளியை மூடுவதா? - டாக்டர் ராமதாஸ் கண்டனம்

 குஜராத்தில் தமிழ் பள்ளியை மூடுவதா? - டாக்டர் ராமதாஸ் கண்டனம்


குஜராத்தில் தமிழ் பள்ளி மூடப்பட்டிருப்பது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-


குஜராத் மாநிலம் ஆமதாபாத் மணிநகரில் செயல்பட்டு வரும் ஆமதாபாத் தமிழ் மேல்நிலைப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கை குறைந்து விட்டதாக கூறி அந்த பள்ளி மூடப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. குஜராத் அரசை, தமிழக அரசு தொடர்பு கொண்டு தமிழ் பள்ளியை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.


குஜராத்தில் மூடப்பட்ட தமிழ் மேல்நிலைப்பள்ளி, பிரதமர் நரேந்திர மோடி முதல்-மந்திரியாக இருந்தபோது சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மணிநகர் தொகுதியில் உள்ளது. 


தமிழ் மீது பற்று கொண்ட பிரதமர் தலையிட்டு தமிழ் பள்ளியை உடனடியாக திறக்க ஏற்பாடு செய்யவேண்டும்.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment