துணை மருத்துவம் படிப்போர் கல்லூரிக்கு திரும்ப மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவு - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, September 12, 2020

துணை மருத்துவம் படிப்போர் கல்லூரிக்கு திரும்ப மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவு

துணை மருத்துவம் படிப்போர் கல்லூரிக்கு திரும்ப  மருத்துவ  கல்வி இயக்குனரகம்  உத்தரவு

கொரோனா தடுப்பு பணி காரணமாக, துணை மருத்துவ மாணவர்கள், உடனடியாக கல்லைரிகளுக்கு திரும்ப வேண்டும்' என, மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், மார்ச்சில் கொரோனா பரவத் துவங்கியது. இதனால், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. துணை மருத்துவ படிப்பு பயிலும் மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், துணை மருத்துவ படிப்புகள் பயிலும் மாணவர்கள், உடனடியாக கல்லுாரிகளுக்கு திரும்ப வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து, மருத்துவகல்வி இயக்குனர் நாராயணபாபு, அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை

:கொரோனா பரவுவது அதிகரித்து வருகிறது. புதிதாக தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையும், நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

எனவே, நர்சிங், முதலுதவி சிகிச்சை, ரேடியோகிராபி, டையட்டிக்ஸ், பிசியோதெரபி உள்ளிட்ட, துணை மருத்துவ படிப்பு பயிலும் மாணவர்கள், உடனடியாக கல்லூரிகளுக்கு திரும்ப வேண்டும்

.துணை மருத்துவ படிப்புகளை பயிற்றுவிக்கும் கல்லூரிகள், மாணவர்கள் மீண்டும் கல்லூரிக்கு திரும்புவதை, கல்லூரி முதல்வர், துறை தலைவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

கொரோனா பேரிடர் காலத்தில், மாணவர்கள் உடனடியாக கல்லூரிகளுக்கு வர மறுத்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், படிப்பை முடிப்பதை தாமதப்படுத்துதல், பட்டத்தை நிறுத்தி வைத்தல் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுதொடர்பாக மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலை சமாளிக்க, கல்லூரிகளுக்கு திரும்பும் மாணவர்களை, உடனடியாக, மருத்துவனையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, மருத்துவ கல்வி இயக்குனரகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment