அரசுப் பணிகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் :அமித் ஷா - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, September 2, 2020

அரசுப் பணிகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் :அமித் ஷா

 அரசுப் பணிகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் :அமித் ஷா


அரசுப் பணிகளில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வருவதை கர்மயோகி இயக்கம் லட்சியமாகக் கொண்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.


அரசு ஊழியர்களுக்கான தேசிய திறன் கட்டமைத்தல் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசு ஊழியர்கள் சர்வதேச சிறந்த செயல்முறைகளை கற்றுக் கொள்ளும் அதேவேளையில், இந்திய கலாச்சாரத்திலும் அவர்கள் வேரூன்றி இருப்பதற்கான அடித்தளத்தை அமைப்பதற்காக, அரசு ஊழியர்களுக்கான தேசிய திறன் கட்டமைத்தல் திட்டமான கர்மயோகி இயக்கம் அமையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


இந்தத் திட்டத்தை வரவேற்று புகழாரம் சூட்டியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொலைநோக்கு பார்வை கொண்ட இந்த சீர்திருத்தத்திற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


"அரசுப் பணிகளில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வருவதை கர்மயோகி இயக்கம் லட்சியமாகக் கொண்டுள்ளது. தனிப்பட்ட மற்றும் அமைப்பு சார்ந்த திறன்மிகு பொது சேவை வழங்கலை கட்டமைப்பதற்கான முழுமையான மற்றும் விரிவான சீர்திருத்தம் இது," என்று அமித் ஷா தெரிவித்தார்.


21 -ஆம் நூற்றாண்டுக்கான மிகப்பெரிய சீர்திருத்தமான இந்த இயக்கம் புதிய பணி கலாச்சாரத்தை உருவக்கும் என்றும், இலக்கு சார்ந்த தொடர் பயிற்சிகள் அரசுப் பணியாளர்களுக்கு ஊக்கமளித்து, அதிகாரமளிக்கும் என்றும் அவர் கூறினா

No comments:

Post a Comment