தொடக்க, நடுநிலை பள்ளிகளில் மாணவர் மற்றும் வகுப்பறை விவரங்களை 'யு~டைஸ்'சில் பதிவேற்றம் செய்ய உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, September 1, 2020

தொடக்க, நடுநிலை பள்ளிகளில் மாணவர் மற்றும் வகுப்பறை விவரங்களை 'யு~டைஸ்'சில் பதிவேற்றம் செய்ய உத்தரவு

 தொடக்க, நடுநிலை பள்ளிகளில் மாணவர் மற்றும் வகுப்பறை விவரங்களை 'யு~டைஸ்'சில் பதிவேற்றம் செய்ய உத்தரவு


தொடக்க, நடுநிலை பள்ளிகளில் மாணவர் மற்றும் வகுப்பறை விவரங்களை 'யு~டைஸ்'சில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை சார்பில் மாநில பள்ளிக் கல்வி தகவல்கள் சேகரிக்கப்பட்டு ஆவணமாக்கப்படுகின்றன. மாவட்டம் வாரியாக, 'யு~டைஸ்' எனும் கல்வி தகவல் தொகுப்பு படிவத்தின் மூலம், ஆண்டுதோறும் தகவல்கள் திரட்டப்படுகின்றன. 

அனைத்து பள்ளிகளில் இருந்தும், கட்டமைப்பு, நிர்வாகம், ஆசிரியர்~ மாணவர் விகிதம், அலுவலக பணியாளர் எண்ணிக்கை உட்பட பல்வேறு தலைப்பில் கேள்விகள் இடம் பெற்றுள்ளன.


இத்தகவலின் அடிப்படையில் அரசு பள்ளிகளுக்கு கல்வி சார் நிதி ஒதுக்கப்படும். ஒவ்வொரு மாணவருக்கும் 'எமிஸ்' எண் உள்ளது. இத்தகவல்களை 'யு~டைஸ்' படிவத்தில் இணைத்து, அனைத்து தகவல்களையும் புதுப்பிப்பது வழக்கம். தகவல் சரிபார்க்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு இணையதளத்தில் பதிவேற்றப்படும்.

No comments:

Post a Comment