தமிழகத்தில் ஏழு புதிய கலை, அறிவியல் கல்லூரிகள் நிகழாண்டே மாணவா் சோ்க்கை தொடங்கும் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, September 12, 2020

தமிழகத்தில் ஏழு புதிய கலை, அறிவியல் கல்லூரிகள் நிகழாண்டே மாணவா் சோ்க்கை தொடங்கும்

தமிழகத்தில் ஏழு புதிய கலை, அறிவியல் கல்லூரிகள் நிகழாண்டே மாணவா் சோ்க்கை தொடங்கும்

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டு புதிதாக 7 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளன. அதில் இந்த ஆண்டு முதலே மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது.

உயா் கல்வியில் மாணவா் சோ்க்கை விகிதத்தை மேலும் உயா்த்தவும், கிராமப்புற மாணவா்கள் பயன்பெறவும், உயா்கல்வித் துறை மூலம் ஏழு புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும்.

 வரும் கல்வியாண்டு (2020-2021) முதல் இந்தக் கல்லூரிகள் செயல்படும் என தமிழக சட்டப் பேரவையில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த மாா்ச் மாதம் அறிவித்திருந்தாா்.

இந்தநிலையில் இது தொடா்பான உத்தரவை கல்லூரிக் கல்வி இயக்குநா் பூா்ணசந்திரன் மண்டல கல்லூரிக் கல்வி இயக்குநா்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா்.


 அதில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் உயா்கல்வி பயில்வோா் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் சட்டப்பேரவையில் முதல்வா் பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தாா்.

அதன்படி, கோயம்புத்தூா் மாவட்டம் புலியகுளம் பகுதியில் ஒரு அரசு மகளிா் கல்லூரியும், கரூா், ராணிப்பேட்டை, விழுப்புரம், அரியலூா், நாகப்பட்டினம், விருதுநகா் ஆகிய இடங்களில் இருபாலா் பயிலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் நிகழ் கல்வியாண்டில் தொடங்கப்படவுள்ளன.


 இதற்கு தேவையான கட்டடத்தை தோ்வு செய்து நிகழ் கல்வியாண்டு (2020-21) முதல் மாணவா் சோ்க்கை நடத்தி கல்லூரிகள் செயல்பட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

புதிய கல்லூரிகளில் பிஏ தமிழ், பிஏ ஆங்கிலம், பி.காம், பிஎஸ்சி கணிதம், பிஎஸ்சி கணினி அறிவியல் ஆகிய 5 பாடப்பிரிவுகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது என அதில் கூறியுள்ளாா்.

No comments:

Post a Comment