அண்ணா பல்கலை. உறுப்பு கல்லூரிகளின் கல்விக் கட்டண விவரம் வெளியீடு - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, September 12, 2020

அண்ணா பல்கலை. உறுப்பு கல்லூரிகளின் கல்விக் கட்டண விவரம் வெளியீடு

அண்ணா பல்கலை. உறுப்பு கல்லூரிகளின் கல்விக் கட்டண விவரம் வெளியீடு

அண்ணா பல்கலைக்கழகம் தனது 13 உறுப்பு கல்லூரிகளின் கல்விக் கட்டணம் குறித்த விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

பொறியியல் கல்லூரிகளின் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ளது.

மாணவா்கள் நலன் கருதி அண்ணா பல்கலைக்கழகம் தனது 13 உறுப்பு கல்லூரிகளின் கல்விக் கட்டணம் குறித்த விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது

உறுப்பு கல்லூரிகளில் பருவ அடிப்படையில் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதன்படி, மாணவா் சோ்க்கையின்போது ரூ.4,810, வைப்பு நிதியாக ரூ.9 ஆயிரம், பருவத்துக்கான கல்வி கட்டணமாக ரூ.15 ஆயிரம் என மொத்தம் ரூ.28,810-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.


 அதேபோன்று, ஒரு கல்வி ஆண்டுக்கான விடுதிக் கட்டணமாக ரூ.22,800, ஒரு பருவத்துக்கு உணவு கட்டணமாக ரூ.12 ஆயிரம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது என அதில் கூறப் பட்டுள்ளது.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களை இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்

No comments:

Post a Comment