'ஆன்லைன்' வகுப்பு நடத்த பள்ளிகளுக்கு அனுமதி - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, September 30, 2020

'ஆன்லைன்' வகுப்பு நடத்த பள்ளிகளுக்கு அனுமதி

 'ஆன்லைன்' வகுப்பு நடத்த பள்ளிகளுக்கு அனுமதி


தனியார் பள்ளிகளை போல, அரசு பள்ளி மாணவர்களுக்கும், 'ஆன்லைன்' வகுப்புகளை, அரசு பள்ளி ஆசிரியர்கள் நடத்தலாம் என, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


ஊரடங்கால், பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டு ஆறு மாதங்கள் ஆகின்றன. நோய் தொற்று பரவல் இன்னும் தீவிரமாக இருப்பதால், பள்ளி, கல்லுாரிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. 


வீட்டில் இருக்கும் மாணவர்களுக்கு, பாடங்களை ஆன்லைனில் நடத்துவதற்கு, தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி, 'டிவி' வழியே பாடங்கள் அடங்கிய வீடியோ ஒளிபரப்பாகின்றன.


இந்நிலையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், விதிகளை பின்பற்றி, ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாம் என, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வி அதிகாரிகள் அனுமதி அளித்து உள்ளனர்.


இது குறித்து, முதன்மை கல்வி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்களுக்கு நடத்திய கூட்டத்தில், இந்த அறிவுரையை வழங்கியுள்ளனர்.

No comments:

Post a Comment