வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, September 30, 2020

வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

 வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு


கடந்த, 2018 ~ ~19ம் நிதியாண்டுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், நவம்பர், 3௦ வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.


கடந்த, 2018 ~ 19ம் நிதியாண்டுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், 2019 ஏப்ரலில் துவங்கியது. 


ஆண்டுக்கு, 2.5 லட்சம் ரூபாய் உச்சவரம்பை தாண்டும் அனைவரும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, வருமான வரி உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும், கணக்கு தாக்கல் என்பது, 2018 முதல் கட்டாயமாக்கப்பட்டது. அபராதம் செலுத்தி, கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், மார்ச், 31ல் முடிந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக, இந்த அவகாசம் செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது, நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டுஉள்ளது.


இது குறித்து, வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது:


 அபராதத்துடன் கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், 2018 ~~ 19ம் நிதியாண்டுக்கு, மார்ச்சில் முடிந்தது. ஊரடங்கால், ஜூன் வரை நீட்டிக்கப்பட்டது.


அதன்பின், ஜூலை, 31, பின், செப்., 30 வரை நீட்டிக்கப்பட்டது. வரி செலுத்துவோர் எதிர்கொள்ளும் சிக்கல்களை கருத்தில் வைத்து, நவம்பர், 30ம் தேதி வரை, தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, மத்திய நிதித்துறை வெளியிட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment