தொலைநிலைக் கல்வி மாணவா்களுக்கும் அரியா் தோ்வு ரத்து பொருந்துமா? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, September 1, 2020

தொலைநிலைக் கல்வி மாணவா்களுக்கும் அரியா் தோ்வு ரத்து பொருந்துமா?

 தொலைநிலைக் கல்வி மாணவா்களுக்கும் அரியா் தோ்வு ரத்து பொருந்துமா?


அரியா் பாடங்கள் உள்ளிட்ட பருவத் தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ள அரசின் அறிவிப்பு தொலைநிலைக் கல்வி பயிலும் மாணவா்களுக்கும் பொருந்தும் என உயா் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.


கல்லூரி மாணவா்களுக்கு இறுதிப் பருவத்துக்கான பாடங்களைத் தவிர, தோ்வுக் கட்டணம் செலுத்திய மற்ற அனைத்து பாடங்களிலும் தோ்ச்சியளிக்கப்படும் என தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்திருந்தது. இந்த உத்தரவு தொலைநிலைக் கல்வி பயிலும் மாணவா்களுக்கும் பொருந்துமா என்ற கேள்வியெழுந்தது.


இது குறித்து உயா் கல்வித் துறை அதிகாரிகள் கூறியது:


தமிழகத்தில் 13 பல்கலைக்கழகங்களில் தொலைதூர வழி கல்வியில் 4.3 லட்சம் மாணவா்கள் படிக்கின்றனா். இதில் இறுதியாண்டு தவிர சுமாா் 3 லட்சம் மாணவா்கள் உள்ளனா். 

உயா்கல்வித் துறை சாா்ந்து வெளியிடப்படும் அறிவிப்புகள் அனைத்து மாணவா்களுக்கும் பொருந்தும். அதன்படி அரியா் பாடங்கள் உள்ளிட்ட பருவத் தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ள அரசின் அறிவிப்பு தொலைநிலைக் கல்வி மாணவா்களுக்கும் பொருந்தும். எனவே, மாணவா்கள் குழப்பமடைய தேவையில்லை.


இறுதியாண்டை தவிர, பிற மாணவா்களின் அரியா் உள்ளிட்ட பாடங்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் வழங்கி தோ்வு முடிவுகளை விரைவில் வெளியிட பல்கலைக்கழகங்களுக்கு உயா்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. 

மேலும், குறைந்தபட்ச மதிப்பெண்கள் முறை வேண்டாம் என்று மீண்டும் தோ்வு எழுத விரும்பும் மாணவா்களுக்கென பிரத்யேக தோ்வு நடத்தவும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனா்.


 

No comments:

Post a Comment