'பைனல் செமஸ்டர்' தேர்வு: கல்லூரிகளில் எப்போது? - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, September 1, 2020

'பைனல் செமஸ்டர்' தேர்வு: கல்லூரிகளில் எப்போது?

 'பைனல் செமஸ்டர்' தேர்வு: கல்லூரிகளில் எப்போது?

கல்லூரிகளில், இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு, வரும், 15ம் தேதிக்கு பின் நடத்தப்படும்' என, தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

கல்லூரிகள் மற்றும் பல்கலை மாணவர்களுக்கான, செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இறுதி ஆண்டு மாணவர்களை தவிர, மற்ற மாணவர்களுக்கு, 'ஆல் பாஸ்' தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. 'அரியர்' பாடங்களுக்கு விண்ணப்பித்து, கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இறுதியாண்டு மாணவர்களுக்கான, செமஸ்டர் தேர்வு, நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

உயர் கல்வி துறையின் கீழ் செயல்பட்டு வரும், அனைத்து பல்கலைகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு, இறுதி செமஸ்டர் தேர்வு, வரும், 15க்கு பின் நடத்தப்பட உள்ளது.


இதற்கான விரிவான தேர்வு அட்டவணை மற்றும் தேர்வு மையங்களின் விபரங்கள், விரைவில் வெளியிடப்படும். இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வானது, மாணவர்கள் நேரில் வந்து எழுதும் தேர்வாக ஏற்பாடு செய்யப்படுகிறது. எனவே, மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி கொள்ளவும்.

No comments:

Post a Comment