எஸ்.ஐ., பணி தேர்வர்களுக்கு கொரோனா சான்று அவசியம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, September 30, 2020

எஸ்.ஐ., பணி தேர்வர்களுக்கு கொரோனா சான்று அவசியம்

 எஸ்.ஐ., பணி தேர்வர்களுக்கு கொரோனா சான்று அவசியம்


'எஸ்.ஐ. உடல் தகுதி தேர்வில் பங்கேற்பவர்கள் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என சான்று வைத்திருக்க வேண்டும்' என காவலர் தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.


தமிழக காவல் துறையில் காலியாக உள்ள எஸ்.ஐ.க்கள் பணியிடங்களுக்கு ஜனவரியில் எழுத்து தேர்வு நடந்தது.


அதில் தேர்வானவர்களுக்கு உடல் தகுதி தேர்வு இன்று முதல் சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடக்க உள்ளது.இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:


தேர்வு கமிட்டிக்கு சென்னை மாநகர தலைமையிட கூடுதல் கமிஷனர் அமல்ராஜ் சேர்மனாகவும் வடக்கு மண்டல போக்குவரத்து இணை கமிஷனர் பாண்டியன் துணை சேர்மனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


மார்பளவு உயரம் ஓட்டப்பயிற்சி கயிறு ஏறுதல் உள்பட பல்வேறு தேர்வுகள் நடக்கும்.முக்கியமாக மார்பளவு கணக்கீடு செய்யும் போலீசார் சான்றுகளை சரிபார்க்கும் அமைச்சு பணியாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு விடக் கூடாது என உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.


எனவே உடல் தகுதி தேர்வில் பங்கேற்க உள்ளவர்கள் அந்தந்த மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்து தொற்று இல்லை என சான்று பெற வேண்டும்.


அதேபோல உடல் தகுதி தேர்வை நடத்தும் போலீசார் அதிகாரிகள் அமைச்சு பணியாளர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று நடத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


~ நமது நிருபர் ~

No comments:

Post a Comment