அண்ணா பல்கலை பெயரை மாற்றாதீங்க முன்னாள் துணை வேந்தர்கள் கடிதம் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, September 30, 2020

அண்ணா பல்கலை பெயரை மாற்றாதீங்க முன்னாள் துணை வேந்தர்கள் கடிதம்

 அண்ணா பல்கலை பெயரை மாற்றாதீங்க முன்னாள் துணை வேந்தர்கள் கடிதம்


அண்ணா பல்கலையின் பெயரை மாற்றக் கூடாது' என, முதல்வர் பழனிசாமிக்கு முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி கடிதம் எழுதியுள்ளார்.


அண்ணா பல்கலையை இரண்டாக பிரித்து, புதிய பல்கலை உருவாக்கப்படும். தற்போதைய அண்ணா பல்கலைக்கு, 'அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலை' என, பெயர் சூட்டப்படும் என, தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது.


இந்த முடிவை கைவிடுமாறு, முதல்வர் பழனிசாமிக்கு அண்ணா பல்கலையின், முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி அனுப்பியுள்ள கடிதம்:


இந்தியாவின் மிக பழமையான, இன்ஜினியரிங் கல்வி நிறுவனமாக, 1794ல், 'சர்வே இன்ஜினியரிங் பள்ளி' என, அண்ணா பல்கலை உருவாக்கப்பட்டது. 1858ம் ஆண்டில், இன்ஜினியரிங் கல்லூரியாகவும், மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., ஆட்சியில், 1978 முதல் தொழில்நுட்ப பல்கலையாகவும் உருவானது.


இந்த பல்கலை, சர்வதேச அளவில், சிறந்த தரவரிசையை பெற்றுள்ளது. அதன் வளர்ச்சிக்கு, பல்வேறு கல்வியாளர்களும், ஆட்சியாளர்களும் உறுதுணையாக செயல்பட்டு உள்ளனர். 


இந்நிலையில், பல்கலையின் பெயரை மாற்றுவது, பல்லாண்டுகளாக பாடுபட்டு, உயர்த்தப்பட்ட தரத்துக்கும், சர்வதேச அளவிலான பெருமைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, புதிதாக அமைய உள்ள பல்கலைக்கு, முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர்., அல்லது ஜெயலலிதா பெயரை வைக்கலாம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


‌ சங்கம் கடிதம் ‌


அண்ணா பல்கலை பேராசிரியர்கள் சங்கம் சார்பில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.அதில் கூறியிருப்பதாவது:


அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கல்லூரிகளில், வெறும் தொழில்நுட்ப படிப்புகள் மட்டும் நடத்தப்படவில்லை. கணிதம், வேதியியல், ஆங்கிலம், ஊடகவியல் உள்ளிட்ட பாடங்களும் நடத்தப்படுகின்றன. 


எனவே, பல்கலையின் பெயரை, தொழில்நுட்ப பல்கலை என்று மாற்ற வேண்டாம். ஏற்கனவே உள்ள பெயர் நீடிக்கட்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


‌ மண்டலம் பிரிப்பு ‌


இதற்கிடையில், அண்ணா பல்கலையின் கோவை மண்டல முன்னாள் துணைவேந்தராக பணியாற்றிய கருணாகரன், முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்:


அண்ணா பல்கலை பெயரை மாற்ற வேண்டாம். மாறாக, அண்ணா பல்கலையை, சென்னை, காஞ்சிபுரம், சேலம், மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி என, பல மண்டலங்களாக பிரிக்க வேண்டும்.


அதில், அண்ணா பல்கலை ~ சென்னை மட்டும், அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலை போன்று, ஆராய்ச்சி மையமாக திகழ வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment