பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான சோ்க்கை கலந்தாய்வு தொடங்கியது - Minnal Kalvi Seithi

Breaking

Friday, September 18, 2020

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான சோ்க்கை கலந்தாய்வு தொடங்கியது

 பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான சோ்க்கை கலந்தாய்வு தொடங்கியதுதமிழகத்தில், பாலிடெக்னிக் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது.


தமிழகத்தில், தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகத்தின்  கீழ் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன.


 இவற்றில் தொழில்நுட்ப பட்டயப் படிப்புகளுக்கு 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. நடப்பாண்டு சோ்க்கைக்கு, இணையவழியில் 27,721 போ் விண்ணப்பித்தனா். 


 அதில் 17 ஆயிரம் மாணவா்கள் மட்டுமே விண்ணப்பக் கட்டணம் செலுத்தி தங்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருந்தனா்.


இதையடுத்து கல்லூரி அளவில் தரவரிசைப் பட்டியல் தயாரித்து, நேரடி மாணவா் சோ்க்கை நடத்த முடிவானது. 


அதன்படி  விளையாட்டு வீரா் மற்றும் முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகளுக்கான சிறப்புப்பிரிவு சோ்க்கைப் பணிகள், கடந்த செப்.11-ஆம் தேதி தொடங்கியது.  இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. 


தொடா்ந்து பொதுப் பிரிவுக்கான மாணவா் சோ்க்கைக் கலந்தாய்வு பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.


 அதன்படி தரவரிசைப் பட்டியலில்  இடம்பெற்றுள்ள மாணவா்களை, கல்லூரிக்கு வரவழைத்து, சோ்க்கைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


 அதன்படி, முதல் நாள் அழைக்கப்பட்ட மாணவா்களுக்கு, பாடப் பிரிவுகளை தோ்வு செய்ய 2 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment