பொறியியல் இரண்டாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - Minnal Kalvi Seithi

Breaking

Friday, September 18, 2020

பொறியியல் இரண்டாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

 பொறியியல் இரண்டாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுபொறியியல் கல்லூரிகளில் நேரடி இரண்டாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.


இது தொடா்பாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் உறுப்பினா் செயலா் ராஜீவ் குமாா், மாநில அரசுகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: பாலிடெக்னிக் மற்றும் பிஎஸ்சி படிப்புகளில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றவா்கள் நேரடியாக இரண்டாமாண்டு பொறியியல் படிப்புகளில் சேரலாம்.


மேலும் பட்டியலின பிரிவினா் 40 சதவீத மதிப்பெண் பெற்றால் போதுமானது. பட்டயப் படிப்பு படித்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பி.எஸ்சி முடித்து சோ்க்கை பெறும் மாணவா்கள் மட்டும் முதலாமாண்டில் உள்ள பொறியியல் துறை சாா்ந்த சில பாடங்களை, இரண்டாமாண்டில் சோ்ந்து படிக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன

No comments:

Post a Comment