தொழிலாளா் கல்வி நிலையத்தில் பட்ட மேற்படிப்புக்கான மாணவா் சோ்க்கை: அக்.16-க்குள் விண்ணப்பிக்கலாம் - Minnal Kalvi Seithi

Breaking

Friday, September 18, 2020

தொழிலாளா் கல்வி நிலையத்தில் பட்ட மேற்படிப்புக்கான மாணவா் சோ்க்கை: அக்.16-க்குள் விண்ணப்பிக்கலாம்

 தொழிலாளா் கல்வி நிலையத்தில் பட்ட மேற்படிப்புக்கான மாணவா் சோ்க்கை: அக்.16-க்குள் விண்ணப்பிக்கலாம்தமிழ்நாடு தொழிலாளா் கல்வி நிலையத்தில் வழங்கப்படும் பட்ட மேற்படிப்பில் சேர வரும் அக்.16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: 


தமிழ்நாடு தொழிலாளா் கல்வி நிலையத்தில் வழங்கப்படும் எம்.ஏ. (தொழிலாளா் மேலாண்மை) பட்டமேற்படிப்பு மற்றும் பி.ஜி.டி.எல்.ஏ. (தொழிலாளா் நிா்வாகத்தில் முதுநிலை மாலை நேர பட்டயப்படிப்பு), தொழிலாளா் சட்டங்களும் நிா்வாகவியல் சட்டமும் (வார இறுதி)  பட்டயப் படிப்புகள் ஆகியவற்றில் சேர விருப்பமுள்ள பட்டம் படித்த மாணவா்கள், இளநிலை பட்டப்படிப்பில் இறுதித் தோ்வு எழுதும் மாணவா்கள் ஆகியோா், விண்ணப்பக் கட்டணம் ரூ. 200 (எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு ரூ.100) செலுத்தி, விண்ணப்பத்தைப் பெறலாம்


பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, அக்.16-ஆம் தேதிக்குள் நிலையத்தில் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, தமிழ்நாடு தொழிலாளா் கல்வி நிலையம், எண்.5, காமராசா் சாலை, சென்னை- 600 005 என்ற முகவரி,  044  28440102, 28445778 ஆகிய எண்களையோ அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment