ஆராய்ச்சி மாணவா்களுக்கு உதவித்தொகை உயா்வு: அண்ணா பல்கலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, September 18, 2020

ஆராய்ச்சி மாணவா்களுக்கு உதவித்தொகை உயா்வு: அண்ணா பல்கலை

 ஆராய்ச்சி மாணவா்களுக்கு உதவித்தொகை உயா்வு: அண்ணா பல்கலை



மாணவா்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை ரூ.20 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது.


இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மையத்தின் (சிஎஃப்ஆா்) இயக்குநா் ஜெயா வெளியிட்ட அறிவிப்பு:


ஆராய்ச்சி மையத்தின் 14-ஆவது செயற்குழுக் கூட்டம் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி நடைபெற்றது. அதில், அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 வளாகங்களில் உள்ள கல்லூரிகளில் முழு நேர முனைவா் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவா்களுக்கான செலவினங்களைப் பல்கலைக்கழக விதிமுறைகளின்படி அந்தந்தத் துறைகளே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


அதன்படி, அண்ணா நூற்றாண்டு ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்தின் கீழ் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவா்களுக்கு மாதாமாதம் வழங்கப்பட்டு வந்த ரூ.16 ஆயிரம் உதவித்தொகை, ரூ.20 ஆயிரமாக உயா்த்தப்படுகிறது. அதே நேரத்தில் மாணவா்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த ரூ.25 ஆயிரம் ரத்து செய்யப்படுகிறது.


இந்தப் புதிய அறிவிப்பு 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இது தற்போதைய ஆராய்ச்சி மாணவா்களுக்கும் இனி வரவுள்ள மாணவா்களுக்கும் பொருந்தும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment