உரிமையியல் நீதிபதி பதவிக்கான முதன்மை எழுத்துத் தேர்வு: புதிய தேதிகள் அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, September 15, 2020

உரிமையியல் நீதிபதி பதவிக்கான முதன்மை எழுத்துத் தேர்வு: புதிய தேதிகள் அறிவிப்பு

உரிமையியல் நீதிபதி பதவிக்கான முதன்மை எழுத்துத் தேர்வு: புதிய தேதிகள் அறிவிப்பு

உரிமையியல் நீதிபதி பதவிக்கான முதன்மை எழுத்துத் தேர்வுக்கான தேதிகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.


இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தமிழ்நாடு மாநில நீதித்துறை பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதிக்கான 176 காலிப் பணியிடங்களுக்கு அறிவிக்கை எண் 25/2019 வெளியிடப்பட்டு முதல் நிலை எழுத்துத் தேர்வு 24.11.2019 அன்று நடைபெற்றது.

28.03.2020 மற்றும் 29.03.2020 ஆகிய நாட்களில் நடைபெறுவதாக இருந்த முதன்மை எழுத்துத் தேர்வு கரோனா வைரஸ் பரவல் காரணமாகவும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.


அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட மேற்படி பதவிக்கான முதன்மை எழுத்துத் தேர்வு, 17.10.2020 மற்றும் 18.10.2020 ஆகிய நாட்களில் சென்னை மையத்தில் மட்டும் நடைபெறும். இதற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு தேர்வாணைய இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும்''.

இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment