கரும்பலகையாக மாறிய வீட்டு சுவர்கள் ; ஆசிரியரின் புதிய யோசனை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, September 25, 2020

கரும்பலகையாக மாறிய வீட்டு சுவர்கள் ; ஆசிரியரின் புதிய யோசனை

 கரும்பலகையாக மாறிய வீட்டு சுவர்கள் ;  ஆசிரியரின் புதிய யோசனை



ஜார்க்கண்டில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுடன் பழங்குடி மாணவர்களுக்கு கல்வி பயில ஆசிரியர் எடுத்த புதுமையான முயற்சி வரவேற்பை பெற்றுள்ளது.


இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜார்க்கண்டில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 


கொரோனா தொற்று அச்சுறுத்தலால், பள்ளி மற்றும் கல்வி நிலையங்கள் மூடப் பட்டுள்ளன. ஜார்க்கண்டின் தும்கா மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்குடி கிராமத்தில் உயர்நிலை பள்ளி ஆசிரியராக இருப்பவர் சபன் பத்ரலெக். 



இவர் மாணவர்களுக்கு கல்வி பயில, புதுமையான யோசனையை செயல்படுத்தியுள்ளார். அந்த கிராமத்தில் உள்ளவர்களின் ஆதரவுடன், வீட்டு திண்ணையின் களிமண் சுவரை கரும்பலகையாக மாற்றியுள்ளார். 


இதன் மூலம் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக வகுப்புகளை நடத்தி வருகிறார்.


தும்கா மாவட்ட தலைமையகத்தில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள டுமார்த்தர் கிராமத்தில் நடுநிலை பள்ளி உள்ளது. அங்கு சுமார் 290 மாணவர்கள் உள்ளனர். ஒவ்வொரு மாணவரும் சமூக தொலைதூர விதிமுறைகளை மனதில் வைத்து ஒரு தனி கரும்பலகையைப் பெறுகிறார்கள்.


 பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட நான்கு ஆசிரியர்கள் உள்ளனர். மேலும் அனைவரும் சுழற்சி முறையில் வகுப்புகளில் கலந்து கொள்கிறார்கள். பள்ளி வகுப்புகளை நடத்துவதற்கான புதுமையான வழி இப்பகுதியில் உள்ள மக்கள் மற்றும் அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. 


இது தற்போது பலரின் வரவேற்பை பெற்றதாக கூறப்படுகிறது.



இது தொடர்பாக அவர் கூறுகையில், கோவிட் ~19 காரணமாக பள்ளி நீண்ட காலமாக மூடப் பட்டிருக்கிறது. ஊரடங்கு தொடர்ந்தால் மாணவர்கள் தங்கள் பாடங்களை மறந்து விடலாம்.


 இந்த கிராமம் தொலைதூர பகுதியில் உள்ளது, அங்கு இணையம் மற்றும் மொபைல் சேவைகள் வசதி இல்லை. எனவே, மாணவர்களின் நலனுக்காக, அவர்களுக்கான வகுப்புகளைஅவர்களது சொந்த வீடுகளில் ஒரு குழுவில் நடத்த முடிவு செய்தோம். 


பழங்குடி குழந்தைகள் சுவர் ஓவியத்தை எளிதில் கற்றுக்கொள்வதால், அவர்களின் வீடுகளின் சுவர்களை கரும்பலகையாகப் பயன்படுத்தி கற்பிக்க முடிவு செய்தோம்.


 இந்த வழியில், மாணவர்களை ஈர்ப்பதில் நாங்கள் வெற்றி பெற்றோம். இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment