மாணவர்களுக்கு 'மாஸ் டிரில்' நடத்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு உத்தரவு - Minnal Kalvi Seithi

Breaking

Friday, September 25, 2020

மாணவர்களுக்கு 'மாஸ் டிரில்' நடத்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு உத்தரவு

 மாணவர்களுக்கு 'மாஸ் டிரில்' நடத்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு உத்தரவு


பள்ளிகள் திறந்ததும், மாணவர்களுக்கு வாரந்தோறும், 'மாஸ் டிரில்' நடத்த வேண்டும் என, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.உடற்கல்வி ஆசிரியர்கள்


மேற்கொள்ள வேண்டியபணிகள் குறித்து, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பி உள்ள சுற்றறிக்கை:


* மாணவ ~ மாணவியர் சீருடையுடனும், காலை பிரார்த்தனை கூட்டத்துக்கு முன்னதாகவும், பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். வகுப்புகளில் பங்கேற்காமல், விளையாட்டு மைதானத்தில் சுற்றும்மாணவர்களை கண்காணித்து, வகுப்புக்கு செல்ல வைக்க வேண்டும்


* வாரந்தோறும் வெள்ளிக் கிழமைகளில், ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான அனைத்து மாணவர்களுக்கும், அனைத்து ஆசிரியர்களின் பங்களிப்புடன், 'மாஸ் டிரில்' என்ற, கூட்டுப் பயிற்சி நடத்த வேண்டும்


* மாணவர்கள் விளையாட தேவையான உபகரணங்களை, தலைமையாசிரியர் வழியே வாங்கி வைக்க வேண்டும்


* மாணவர்களை வட்ட, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு அழைத்து சென்று, பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்து வர வேண்டும்


* மாதம் ஒரு முறை பாடக்குறிப்பு எழுத வேண்டும்.விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு, காலை, மாலையில், சிறப்பு பயிற்சி தர வேண்டும். ஆண்டு விளையாட்டு விழா நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும்


* பள்ளியின் நடைமுறைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் மாணவர்கள், பெற்றோர், பொது மக்களின் பிரச்னைகளுக்கு, தலைமையாசிரியருடன் இணைந்து செயல்பட்டு, சுமூக தீர்வை காண்பது, உடற்கல்வி ஆசிரியரின் கடமை.பள்ளியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவில், உடற்கல்வி ஆசிரியர் இடம் பெற வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment