புதிய கட்டிடங்கள் கட்டப்படுவதால் காரைக்குடி பள்ளியில் மீண்டும் அட்மிஷன் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, September 2, 2020

புதிய கட்டிடங்கள் கட்டப்படுவதால் காரைக்குடி பள்ளியில் மீண்டும் அட்மிஷன்

 புதிய கட்டிடங்கள் கட்டப்படுவதால் காரைக்குடி பள்ளியில் மீண்டும் அட்மிஷன்


சிவகங்கை மாவட்டம், காரைக்குடி டி.டி.நகர் பகுதியில் ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. 


 6ம் வகுப்பில் 200 மாணவர்கள் மட்டுமே சேர்க்க முடியும் என்ற நிலையில் கடந்த மாதம் 17ம் தேதி அட்மிஷன் துவங்கிய முதல்நாளே 700 பேர் குவிந்தனர்.  கூடுதல் வகுப்பறைகள் இல்லாததால் 200 மாணவர்களை மட்டும் சேர்த்து விட்டு 500 பேரை இடம் இல்லை என திருப்பி அனுப்பினர். இதுகுறித்து தினகரனில் செய்தி வெளியானது


இதை தொடர்ந்து கலெக்டர் ஜெயகாந்தனின் உத்தரவின்படி கூடுதல் கட்டிடம் கட்ட நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கூடுதல் வகுப்பறை கட்டப்பட உள்ளதால் மீண்டும் அட்மிஷன் நேற்று துவங்கியது. முதல்நாளே 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.   தலைமையாசிரியர் பீட்டர்ராஜா கூறுகையில், கூடுதலாக 4 வகுப்பறைகள் கட்டப்பட உள்ளது. இதற்கு தகுந்தார்போல் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றார்.

No comments:

Post a Comment