இந்த மாநிலத்தில் அக்டோபர் முதல் வாரத்தில் பருவத் தேர்வு தொடக்கம் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, September 2, 2020

இந்த மாநிலத்தில் அக்டோபர் முதல் வாரத்தில் பருவத் தேர்வு தொடக்கம்

 இந்த மாநிலத்தில் அக்டோபர் முதல் வாரத்தில் பருவத் தேர்வு தொடக்கம்


மகாராஷ்டிரத்தில் அக்டோபர் முதல் வாரத்தில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக இறுதிப் பருவத்தேர்வுகள் நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் உதய் சமந்த் தெரிவித்துள்ளார்.


கரோனா பெருந்தொற்று பரவி வரும் சூழலில், மகாராஷ்டிரத்தில் இறுதிப் பருவத் தேர்வுகளை நடத்துவது குறித்து  மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் உதய் சமந்த் ஆலோசனை நடத்தினார்.


இதில் அக்டோபர் முதல் வாரத்தில் கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகளை நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 


இது தொடர்பாக பேசிய அமைச்சர் உதய் சமந்த், நாங்கள் மிகக்குறுகிய காலத்தில் பருவத் தேர்வுகளை நடத்தவில்லை. மாணவர்கள் தேர்விற்கு தயாராக போதிய கால இடைவெளி அளிக்கப்பட்டுள்ளது.

 கல்லூரி மற்றும் பல்கலைக் கழக இறுதிப் பருவத் தேர்வுகள் அக்டோபர் முதல் வாரத்தில் நடைபெறும். மாணவர்கள் செப்டம்பர் மாதம் முழுவதையும் தேர்வுக்கு தயாராவதற்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 


பல்கலைக் கழக இறுதிப் பருவத் தேர்வுகளை நேரடியாக நடத்தும் அளவிற்கு சூழல் இல்லை என்பதால், இணையத்தில் தேர்வுகளை நடத்துவது குறித்து பல்கலைக் கழகங்கள் ஆராய்ந்து வருகின்றன.

No comments:

Post a Comment