அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சமூக நலக்கூடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றி வகுப்புகளை நடத்தலாம்: சென்னை உயர்நீதிமன்றம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, September 9, 2020

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சமூக நலக்கூடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றி வகுப்புகளை நடத்தலாம்: சென்னை உயர்நீதிமன்றம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சமூக நலக்கூடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றி வகுப்புகளை நடத்தலாம்: சென்னை உயர்நீதிமன்றம்


அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சமூக நலக்கூடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றி வகுப்புகளை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவித்துள்ளது

. ஆன்லைன் வகுப்புகளுக்கு தடைவிதிக்க வேண்டுமென்று பலரும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

 இதனைத்தொடர்ந்து, வழக்கு மீதான வாதங்களும் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் இன்றைய தினம் இதுதொடர்பான வழக்கில் தீர்ப்பும் வழங்கப்பட்டது.


 அதாவது ஆன்லைன் வகுப்புகளை நடத்த எந்த வித தடையும் இல்லை என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும் 14 விதமான வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டுமென்றும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கும், மத்திய, மாநில அரசுக்கும் உத்தரவு பிறப்பித்திருந்தது.

தற்போது தீர்ப்பின் முழுவிவர அறிக்கையானது வெளியாகியுள்ளது. அதில், முக்கியமான பல கருத்துகளை நீதிமன்றம் தரப்பிலிருந்து உத்தரவாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும்போது, நெட்ஒர்க் பிரச்சனைகள் ஏதேனும் ஏற்பட்டால், சம்மந்தப்பட்ட மாணவர்களுக்கு அந்த பாடத்தை ரெகார்டு செய்து வாட்ஸப்பில் அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


 அவ்வாறு தெரிவிக்காத பட்சத்தில், சமூக
நலக்கூடத்தில் மாணவர்களை அழைத்து சமூக இடைவெளியை பின்பற்றி அவர்களுக்கு படங்களை நடத்தலாம் என்ற உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

 அதுமட்டுமல்லாது, ஆன்லைன் வசதிகள் மூலமாக பாடங்களை கற்பிக்க முடியவில்லை என்றால், பாதிக்கப்பட்ட மாணவர்களை கண்டறிந்து, அவர்களை மட்டும் பள்ளிக்கு அழைத்து உரிய சமூக இடைவெளியை பின்பற்றி பள்ளிகளிலேயே ஆசிரியர்கள் பாடங்களை நடத்தலாம் என்ற உத்தரவையும் பிறப்பித்துள்ளது.


இதன் மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்கள் என அனைவரும் கல்வி கற்க வேண்டும். மேலும் அவர்களுக்கு எந்த வித பிரச்சனையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதன் அடிப்படையிலேயே இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. தற்போது இதற்கான செயல்பாடுகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment