ஆன்லைன் மூலம் கல்வி கற்க முடியாத மாணவர்கள் வசிக்கும் பகுதியில் பாடம் கற்பிக்கும் அரசு பள்ளி ஆசிரியர் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, September 9, 2020

ஆன்லைன் மூலம் கல்வி கற்க முடியாத மாணவர்கள் வசிக்கும் பகுதியில் பாடம் கற்பிக்கும் அரசு பள்ளி ஆசிரியர்

ஆன்லைன் மூலம் கல்வி கற்க முடியாத மாணவர்கள் வசிக்கும் பகுதியில் பாடம் கற்பிக்கும் அரசு பள்ளி ஆசிரியர்


நெமிலி அருகே மாணவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று அரசு பள்ளி ஆசிரியர் பாடம் கற்பித்து வருகிறார். இவருக்கு பொதுமக்கள், வட்டார கல்வி அலுவலர்கள் பாராட்டு தெரிவித்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியம் கொந்தங்கரையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

 இப்பள்ளியில் கொந்தக்கரை, வெள்ளைக்குளம் கிராமத்தை சேர்ந்த 29 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

 இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் மார்ச் 24ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அளித்தது.

 அதன்படி, கொந்தக்கரை தொடக்கப்பள்ளியும் மூடப்பட்டது.

இதனால், மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து, ஆன்லைனில் மாணவர்களுக்கு பாடம் எடுக்க அரசு உத்தரவிட்டது.

அதன்படி, கொந்தக்கரை தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கடந்த சில வாரங்களாக ஆசிரியர்கள் பாடம் எடுத்து வருகின்றனர்.

 இந்நிலையில், பள்ளியை சேர்ந்த ஏழை மாணவர்கள் சிலரிடம் செல்போன் இல்லாததால் அவர்களால் ஆன்லைன் மூலம் கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டது.


 இதனால், பள்ளி ஆசிரியர் இளையராஜா மாணவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வாரத்திற்கு ஒரு முறை நேரில் சென்று சமூக இடைவெளி கடைபிடித்து மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார். ஆசிரியரின் இந்த செயலுக்கு பொதுமக்கள், வட்டார கல்வி அலுவலர்கள் சம்பத், ஜெயராஜ் பாராட்டு தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment