தலைமை செயலக சங்கம் கோரிக்கை - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, September 23, 2020

தலைமை செயலக சங்கம் கோரிக்கை

 தலைமை செயலக  சங்கம் கோரிக்கை


சனிக்கிழமை விடுமுறையை, மீண்டும் உறுதி செய்ய வேண்டும்' என, தமிழ்நாடு தலைமை செயலக சங்கம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.


சங்க நிர்வாகிகள், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: கொரோனா பரவல் அதிகமாக இருந்த போது, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க, அரசு அலுவலகங்கள், 50 சதவீத பணியாளர் களுடன் இயங்கின. அதனால், சனிக்கிழமை விடுமுறை, தற்காலிகமாக தளர்த்தப்பட்டு, பணி நாளாக அறிவிக்கப்பட்டது.


தற்போது, ஊரடங்கு தளர்த்தப்பட்டு, அரசு அலுவலகங்கள், 100 சதவீத பணியாளர்களுடன் இயங்குகின்றன. 


ஆனால், சனிக்கிழமை பணி நாள் என்ற அறிவிப்பை, அரசு ரத்து செய்ய வில்லை. பணியாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் நலனை பேணவும், அரசு அலுவலகங்களில், சமூக இடைவெளியை உறுதி செய்யவும்,  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப் பட்ட, சனிக்கிழமை விடுமுறை என்பதை, மீண்டும் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.***

No comments:

Post a Comment