கால்நடை பல்கலை அவகாசம் நீட்டிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, September 23, 2020

கால்நடை பல்கலை அவகாசம் நீட்டிப்பு

 கால்நடை பல்கலை  அவகாசம் நீட்டிப்பு


தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில், நடப்பு கல்வியாண்டிற்கான, மாணவர் சேர்க்கைக்கு, விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில், 2020 ~~ 21ம் கல்வி ஆண்டிற்கான, இளநிலை கால்நடை மருத்துவம், கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு, உணவு தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம். மற்றும், பால்வள தொழில்நுட்ப பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, ஆக., 24 முதல், இம்மாதம், 28 வரை, இணையதளம் வழியாக, விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.


தற்போது, முதல்வர் உத்தரவின்படி, விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் நாள், அக்., 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை, 12 ஆயிரத்து ஒன்பது மாணவ ~ மாணவியர் விண்ணப்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment