புதிய கல்வி கொள்கை இன்று கருத்து கேட்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, September 23, 2020

புதிய கல்வி கொள்கை இன்று கருத்து கேட்பு

 புதிய கல்வி கொள்கை  இன்று கருத்து கேட்பு



புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக, மாணவர்கள், பெற்றோர் மற்றும் பேராசிரியர்களிடம், நிபுணர் குழு, இன்று கருத்து கேட்கிறது.


மத்திய அரசின் சார்பில், புதிய தேசிய கல்வி கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், இதை அமல்படுத்துவது குறித்து, அரசியல் கட்சிகள் மற்றும் கல்வியாளர்களிடம், பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.


 இந்நிலையில், பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்க, உயர் கல்வி மற்றும் பள்ளி கல்வி துறை சார்பில், தனித்தனியே நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 


உயர் கல்வி நிபுணர் குழுவினர், தமிழகத்தில் உள்ள பல்கலை துணை வேந்தர்களிடம், நேற்று முன்தினம் கருத்துக்கள் கேட்டனர். உயர் கல்வித்துறை முதன்மை செயலர் அபூர்வா தலைமை யில், 'ஆன்லைன்' வழியில், இந்த கூட்டம் நடந்தது.


இதையடுத்து, இன்று மாணவர்கள், பெற்றோர் மற்றும் பேராசிரியர்களிடம், நிபுணர் குழு கருத்து கேட்கிறது. காலை, 9:30 மணி முதல், மூன்று குழுவாக, 'ஆன்லைன்' வழியில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது.

No comments:

Post a Comment