மாணவர்கள் உருவாக்கிய எலக்ட்ரிக் பைக்! 5 ரூபாய் செலவில் 25 கி.மீ., பயணம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, September 23, 2020

மாணவர்கள் உருவாக்கிய எலக்ட்ரிக் பைக்! 5 ரூபாய் செலவில் 25 கி.மீ., பயணம்

 மாணவர்கள் உருவாக்கிய எலக்ட்ரிக் பைக்! 5 ரூபாய் செலவில் 25 கி.மீ., பயணம்


கோவை கல்லுாரி மாணவர்கள் எரிபொருள் மாசை குறைத்து, சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வகையில், ஐந்து ரூபாய் செலவில், 25 கி.மீ., வரை செல்லக் கூடிய எலக்ட்ரிக் பைக்கை உருவாக்கியுள்ளனர்.


போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களின் எரிபொருள் பயன்பாடு சுற்றுசூழலில் கடுமையான மாசை ஏற்படுத்துகிறது. 


ஒரு நபர் சராசரியாக நாள் ஒன்றுக்கு, 10 கி.மீ., வாகனத்தை இயக்கினால் ஆண்டுக்கு, 60 முதல் 70 கிலோ கார்பன் டைஆக்சைடு போன்ற காற்றை மாசுப்படுத்தும் வாயுக்களை வெளியிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


கோவை, குமரகுரு இன்ஜி., கல்லுாரி மாணவர்கள் ஒன்றிணைந்து, 'டீம் ரிக்' என்ற பெயரில் ஒரு எலக்ட்ரிக் பைக்கை உருவாக்கியுள்ளனர். 


இந்த பைக்கில், 5 ரூபாய் செலவில், 25 கி.மீ., வரை பயணிக்கலாம் என, கூறுகின்றனர்.எலக்ட்ரிக் பைக்கை வடிவமைத்துள்ள இயந்திரவியல் துறை மாணவர்கள் கிரண் மற்றும் ஆதி சீனிவாசன் கூறியதாவது:


 முப்பரிமாண தொழில்நுட்ப வசதிகளை கொண்டு எலக்ட்ரிக் பைக்கை உருவாக்கியுள்ளோம். பொதுவாக ஒரு இருசக்கர வாகனம், 110 கிலோ எடை இருக்கும். 


நாங்கள் தயாரித்துள்ள எலக்ட்ரிக் பைக், 40 கிலோ மட்டுமே. அதிகபட்சமாக, 30 கி.மீ., வேகத்தில் செல்லலாம். 


ஒரு முறை, இரண்டு மணிநேரத்துக்கு பேட்டரி சார்ஜ் செய்தால், 20~25 கி.மீ., துாரம் வரை பயணம் செய்ய முடியும்.


இந்த பைக்கில், 20 கி.மீ., செல்ல, ஐந்து ரூபாய் மின் கட்டணம் செலவு செய்தால் போதும். இந்த வாகனத்துக்கு காப்புரிமை பெற்ற பின், அடுத்த கட்ட பணிகள் நடத்த ஆலோசித்துள்ளோம்.


இவ்வாறு மாணவர்கள் தெரிவித்தனர்.இந்த வாகனத்துக்கு, லித்தியம் ஐயான் 48 வி 15 ஏஎச்., பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. 


ஒரு முறை முழு பேட்டரி சார்ஜ் செய்ய,0.6 யூனிட் மின்சாரம் தேவைப்படும். பேட்டரி முழுவதும் சார்ஜ் செய்ய, 2.5 மணி நேரம் எடுக்கும்.

No comments:

Post a Comment