தொழில்பயிற்சி நிலையங்களுக்கான இணையவழி கலந்தாய்வு அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, September 23, 2020

தொழில்பயிற்சி நிலையங்களுக்கான இணையவழி கலந்தாய்வு அறிவிப்பு

 தொழில்பயிற்சி நிலையங்களுக்கான  இணையவழி கலந்தாய்வு அறிவிப்பு


கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் இணையவழி கலந்தாய்வு நடக்கவுள்ளதாக கலெக்டர் ராஜாமணி அறிவித்துள்ளார்.


அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், 2020க்கான அரசு இடஒதுக்கீட்டில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இணையவழியில் பெறப்பட்டன


.இதற்கான கலந்தாய்வு, இணையவழியில் நடைபெறவுள்ளதால், அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களுக்கு விருப்பமான குறைந்தபட்சம், 5 முதல் 25 தொழிற்பயிற்சி நிலையம், மற்றும் தொழிற்பிரிவுகள் இணையதளத்தில் (www.skilltrainingtn.gov.in) தேர்வு செய்ய வேண்டும்


.விண்ணப்பதாரர்கள், 25ம் தேதி வரை விருப்பமான தொழிற்பயிற்சி நிலையம், தொழிற்பிரிவை தேர்வு செய்து கொள்ளலாம். ஒரே தொழிற்பயிற்சி நிலையத்தில், ஒன்றுக்கும் மேற்பட்ட தொழிற்பிரிவுகளையும் தேர்வு செய்யலாம்.


குறிப்பிட்ட நாளுக்கு பிறகு, விண்ணப்பதாரரின் தரவரிசை, இனசுழற்சி, மற்றும் விருப்ப தேர்வுகளை அடிப்படையில், சேர்க்கை உறுதி செய்யப்பட்டு, தற்காலிக சேர்க்கை ஆணை, 26ம் தேதி அன்று இணையவழியில் வழங்கப்படும்.


சந்தேகங்கள் இருப்பின், 0422~2642041/ 8072737402, 8940837678, 9025697790, மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையம்~ 0422~2965533, 9865128182, ஆனைகட்டி~ 9965103597, 9360436247 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் அறிவித்துள்ளார்.


கலெக்டர் அலுவலகத்தின்தாமதமான அறிவிப்புகலந்தாய்வுக்கான விருப்ப பயிற்சி நிலையம், தொழிற்பிரிவு தேர்வு செய்ய நேற்று முதல் காலஅவகாசம் துவங்கியுள்ள நிலையில், கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக தரப்பில், தாமதமாக நேற்று தான் அறிவிப்பு வெளியிடப்பட்டது.


 இதனால், விண்ணப்பதாரர்களுக்கு போதிய அவகாசம் கிடைக்காத சூழல் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment