தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சனிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்: முதல்வருக்கு கோரிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, September 1, 2020

தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சனிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்: முதல்வருக்கு கோரிக்கை

 தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சனிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்: முதல்வருக்கு கோரிக்கை


தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் இரா.சண்முகராஜன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பதற்காக வருகிற 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஆனாலும் பல்வேறு தளர்வுகளையும்  முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி தற்போது, அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் பணியாற்றி வரும் சூழலில்,  செப்டம்பர் 1ம் தேதி (நேற்று) முதல் 100 சதவீத அலுவலர்கள் பணியாற்றிட உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வந்த ஊரடங்கு  உத்தரவுப்படி 50 சதவீத அலுவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வந்த சூழ்நிலையில், அனைத்து சனிக்கிழமையும் வேலைநாளாக தமிழக அரசு  அறிவித்திருந்தது. அன்றைய சூழ்நிலையில் அந்நிகழ்வு தேவைப்பட்டது.


தற்போது, 100 சதவீத அலுவலர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட உத்தரவு பிறப்பித்த வேளையில் சனிக்கிழமை விடுமுறையாக  அறிவிக்கப்படவில்லை

. எனவே 100 சதவீத பணியாளர்களும் அலுவலகங்களில் பணியாற்றி வரும் இந்த நேரத்தில் சனிக்கிழமையை விடுமுறை  நாளாக அறிவித்து முதல்வர் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment