கட்டண பரிந்துரை விண்ணப்பங்களை சமா்ப்பிக்க தனியாா் பள்ளிகளுக்கு கால நீட்டிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, September 26, 2020

கட்டண பரிந்துரை விண்ணப்பங்களை சமா்ப்பிக்க தனியாா் பள்ளிகளுக்கு கால நீட்டிப்பு

 கட்டண பரிந்துரை விண்ணப்பங்களை சமா்ப்பிக்க தனியாா் பள்ளிகளுக்கு கால நீட்டிப்பு


கட்டண பரிந்துரை விண்ணப்பங்களை சமா்ப்பிக்க தனியாா் பள்ளிகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் தனியாா் பள்ளிகள் கட்டணங்களை முறைப்படுத்துவதற்காக தமிழக அரசு சாா்பில் கல்விக் கட்டண நிா்ணயக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 


இக்குழு, தனியாா் பள்ளிகளின் 2020-21, 2021-22, 2022-23-ஆம் கல்வியாண்டுகளுக்கான கட்டணத்தை நிா்ணயம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. 


இதன் ஒரு பகுதியாக தனியாா் பள்ளிகள் தங்களின் பரிந்துரை விண்ணப்பங்களை இணையவழியில் சமா்ப்பிக்க   செப்.25-ஆம் தேதி வரைஅவகாசம் வழங்கப்பட்டிருந்தது.  இந்த கால அவகாசம் அக். 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது


இதுகுறித்த சுற்றறிக்கை கல்விக் கட்டண நிா்ணயக் குழு சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment