கலை படிப்புக்கு 100 சதவீத கட் ஆப் - Minnal Kalvi Seithi

Breaking

Monday, October 12, 2020

கலை படிப்புக்கு 100 சதவீத கட் ஆப்

 கலை படிப்புக்கு 100 சதவீத கட் ஆப்


டில்லியில் உள்ள கல்வி நிறுவனங்களில், கலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு, 'கட் ஆப்' மதிப்பெண் கணிசமாக அதிகரித்துள்ளது.


இன்ஜினியரிங், மருத்துவ மாணவர்களை போல், 100க்கு, 100 'கட் ஆப்' எடுத்தால் மட்டுமே, குறிப்பிட்ட படிப்புகளில் சேர முடியும் என்ற, நிலை ஏற்பட்டுள்ளது.


நாடு முழுதும் உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.


 அறிவிப்பு


வழக்கமாக, ஐ.ஐ.டி.,க்கள், எய்ம்ஸ் போன்ற தேசிய உயர் கல்வி நிறுவனங்கள், சென்னை அண்ணா பல்கலை வளாக கல்லூரிகள், தமிழக அரசு மருத்துவ கல்லூரிகள் போன்றவற்றுக்கு, அதிக கட் ஆப் மதிப்பெண் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.


அதேபோல, டில்லியில்உள்ள ஸ்ரீராம் வணிக கல்லூரியில் சேரவும், அதிக போட்டி உண்டு. இந்த ஆண்டு, டில்லியில் உள்ள வேறு சில கல்லூரிகளில், கலை படிப்புகளில் சேரவும், கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.


மத்திய பல்கலையின் கீழ் செயல்படும், ஸ்ரீராம் பெண்கள் கல்லூரியில், பொருளியல், அரசியல் அறிவியல் மற்றும் உளவியல் பாடங்களில் சேர, 100க்கு, 100 கட் ஆப்மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது


.மதிப்பெண் குறையும்.


இந்த கல்லூரியில், கடந்த ஆண்டு, பொருளியல் மற்றும் அரசியல் அறிவியலுக்கு, கட் ஆப் மதிப்பெண், 98 ஆகவும், உளவியலுக்கு, 99 ஆகவும் இருந்தது.


அதேபோல, ஹிந்து கல்லூரியில் பொருளியலுக்கு, 99.25; அரசியல் அறிவியலுக்கு, 99.50; வரலாறுக்கு, 98.75 என, கட் ஆப் நிர்ணயிக்கப்பட்டுள்ளது


.இந்த மூன்றை தவிர மற்ற, 19 வகை பாடப் பிரிவுகளுக்கு, 98 மதிப்பெண் வரை, கட் ஆப் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தம் எட்டு முறை, கட் ஆப் வெளியிடப்படும். அதில் படிப்படியாக, மதிப்பெண் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.


சி.பி.எஸ்.இ., மதிப்பெண் அதிகரிப்பு


இந்த முறை, மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம், கொரோனா காலத்திலும் மிகவும் கட்டுப்பாடுடன் நடந்தது. அதனால், தமிழக பாடத்திட்ட மாணவர்கள் உட்பட, மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு, அதிகபட்ச மதிப்பெண்கள் குறைந்துள்ளன.


 தமிழக மாணவர்களுக்கு தரம் உயர்த்தப்பட்ட விரிவான பாடத்திட்டம்,கடும் சிக்கலான வினாத்தாள் போன்றவையும், மதிப்பெண் குறைவதற்கு காரணமாக கருதப்படுகிறது.


ஆனால், மத்திய அரசின், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், கொரோனா காரணமாக, பிளஸ் 2 பொது தேர்வுக்கு, மிக எளிதான வினாத்தாளே அமைக்கப்பட்டது. ஆசிரியர்கள், தங்கள் வீட்டிலேயே விடைத்தாள்களை திருத்த அனுமதிக்கப்பட்டனர்


.இந்நிலையில், சி.பி.எஸ்.இ., மாணவர்களின் மதிப்பெண்கள், முந்தைய ஆண்டுகளை விடவும், மாநில பாடத்திட்ட மாணவர்களை விடவும் அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment