இன்ஜினியரிங் கவுன்சிலிங் முதல் சுற்று பதிவு நிறைவு - Minnal Kalvi Seithi

Breaking

Monday, October 12, 2020

இன்ஜினியரிங் கவுன்சிலிங் முதல் சுற்று பதிவு நிறைவு

 இன்ஜினியரிங் கவுன்சிலிங் முதல் சுற்று பதிவு நிறைவு


இன்ஜினியரிங் கவுன்சிலிங் முதல் சுற்று மாணவர்களுக்கு, இன்றுடன் விருப்ப பதிவு முடிகிறது. இரண்டாம் சுற்று மாணவர்களுக்கு, கட்டணம் செலுத்தும் வசதி நேற்று துவங்கியது.


அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில், முதலாம் ஆண்டு படிப்பில் சேரவுள்ள மாணவர்களுக்கு, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வழியாக, ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.


இந்த ஆண்டு, 1.12 லட்சம் பேர் கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். சிறப்பு பிரிவு ஒதுக்கீட்டில், 500 பேர் இட ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.


இந்நிலையில், பொது பிரிவு மற்றும் தொழிற்கல்வி மாணவர்களுக்கு, நான்கு சுற்றுகளாக அக்., 8ல் கவுன்சிலிங் துவங்கியது. 


முதல் சுற்றில், 175 வரை, 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்ற, 12 ஆயிரத்து, 300 பேர் பங்கேற்கின்றனர். இவர்களுக்கு கவுன்சிலிங் கட்டணம் செலுத்தும் அவகாசம், அக்., 11ல் முடிந்தது. 


கல்லூரி மற்றும் பாடப்பிரிவுக்கான விருப்ப பதிவு, நேற்று துவங்கி இன்றுடன் முடிகிறது


.உத்தேச ஒதுக்கீடு நாளை வழங்கப்படுகிறது. அதை, 15ம் தேதிக்குள் மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும்.


16ம் தேதி, இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். இரண்டாம் சுற்றில், 145.5 வரை, 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்ற, 13 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்களுக்கு, கட்டணம் செலுத்தும் அவகாசம், நேற்று துவங்கியது.


வரும், 15ம் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. விபரங்களை, www.tneaonline.org என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment