பிளஸ் 2 முடித்தவர்களுக்கு நாளை மார்க்  ஷீட் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, October 12, 2020

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு நாளை மார்க்  ஷீட்

 பிளஸ் 2 முடித்தவர்களுக்கு நாளை மார்க்  ஷீட்


பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர் களுக்கு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மட்டும், ஏற்கனவே வழங்கப்பட்டது.


இதையடுத்து, மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளதால், திருத்தப்பட்ட மதிப்பெண்ணுடன் கூடிய, அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், நாளை முதல் வழங்கப்பட உள்ளன.மாணவர்கள் தங்கள் பள்ளியிலும், தனித்தேர்வர்கள், தங்கள் தேர்வு மையத்திலும் சான்றிதழ்களை பெறலாம். 


அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும், தனித்தனியே மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.


ஏதாவது ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, ஒரே மதிப்பெண் பட்டியல் மட்டும் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment