10ம் வகுப்பு சான்றிதழ் நாளை வினியோகம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, நாளை அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பத்தாம் வகுப்பு பொது தேர்வு, இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் அடிப்படையில், மாணவர்களின் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது.அந்த மாணவர்களுக்கு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்நிலையில், பொது தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, அசல் மதிப்பெண் சான்றிதழ், நாளை வழங்கப்பட உள்ளது.பள்ளிகளில், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி, மாணவர்கள் அல்லது பெற்றோரை வரவைத்து, சான்றிதழ்களை வழங்க, அரசு தேர்வுத் துறை அறிவுறுத்தி உள்ளது.
No comments:
Post a Comment