கால்நடை மருத்துவ படிப்பு :15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பம் - Minnal Kalvi Seithi

Breaking

Friday, October 9, 2020

கால்நடை மருத்துவ படிப்பு :15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பம்

 கால்நடை மருத்துவ படிப்பு  :15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பம்


கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.


தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ் சென்னை நாமக்கல் திருநெல்வேலி ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. இந்த கல்லுாரிகளில் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டபடிப்பு உணவு கோழியின மற்றும் பால்வள தொழில்நுட்ப பட்டப்படிப்புகள் உள்ளன.


பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 


இந்த படிப்புகளுக்கு 2020 ~ ~21ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி ஆக. 28ல் துவங்கியது. இறுதி நாளான நேற்று வரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.


இதுகுறித்து பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டாளர் டாக்டர் குமாரசாமி கூறியதாவது: கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் பரிசீலனை அடுத்த வாரம் துவங்கும். 


இந்த மாத இறுதியில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். எம்.பி.பி.எஸ். ~~ பி.டி.எஸ். கவுன்சிலிங்கிற்கு பின் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment