7 புதிய கல்லூரிகளுக்கு பேராசிரியர் நியமனம் - Minnal Kalvi Seithi

Breaking

Friday, October 9, 2020

7 புதிய கல்லூரிகளுக்கு பேராசிரியர் நியமனம்

 7 புதிய கல்லூரிகளுக்கு பேராசிரியர் நியமனம்


ஏழு புதிய கல்லூரிகளுக்கு, பேராசிரியர்கள் உட்பட, 210 பேரை நியமிக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.


தமிழகத்தில், ஏழு புதிய கலை அறிவியல் கல்லூரிகளை துவங்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம்; கரூர் மாவட்டம், தரகம்பட்டி; விழுப்புரம் மாவட்டம், வானுார்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார்; நாகை மாவட்டம், குத்தாலம்; ராணிப்பேட்டை மாவட்டம், ஜம்புகுளம் ஆகிய இடங்களில், இரு பாலர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், கோவை, புலியகுளத்தில் மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் துவங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது


இந்த கல்லூரிகளில், நடப்பாண்டில் மாணவர்களை சேர்த்து, பாடங்கள் நடத்துவதற்காக, ஒவ்வொரு கல்லூரிக்கும் தலா, 17 உதவி பேராசிரியர்கள் மற்றும், 13 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.


 இதற்கான அரசாணையை, தமிழக உயர் கல்வி துறை முதன்மை செயலர் அபூர்வா பிறப்பித்துள்ளார்

No comments:

Post a Comment