ஏமாற்றம்: சத்துணவு காலி பணியிட நேர்காணலுக்கு வந்தவர்கள்...திடீரென ரத்தானதால் விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, October 9, 2020

ஏமாற்றம்: சத்துணவு காலி பணியிட நேர்காணலுக்கு வந்தவர்கள்...திடீரென ரத்தானதால் விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி

 ஏமாற்றம்: சத்துணவு காலி பணியிட நேர்காணலுக்கு வந்தவர்கள்...திடீரென ரத்தானதால் விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி


சத்துணவு அமைப்பாளர் பணிக்கு நேர்காணல் நிறுத்தி வைக்கப்படுவதற்கான அறிவிப்பினை அரசு தாமதமாக வெளியிட்டதால், ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் சத்துணவு பணிக்கு விண்ணப்பித்தவர்கள்ஏமாற்றத்துடன் திரும்பினர்.


ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் உள்ள 60 கிராமங்களில் அரசு பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ் பொறுப்பாளர் 27, சமையலர் 14, சமையல் உதவியாளர் 7 என மொத்தம் 48 பணியிடங்கள் காலியாக உள்ளன.மாவட்ட நிர்வாகம், காலி பணியிடத்தை நிரப்ப முடிவு செய்து, தகுதி வாய்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் என கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தது.


அதையொட்டி செப்டம்பர் 26 முதல் 30ம் தேதி வரை 6 நாட்கள் பி.டி.ஓ., அலுவலகத்தில் விண்ணப்பம் பெறப்பட்டது.


இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க பிளஸ் 2, 10 மற்றும் 5ம் வகுப்பு படித்திருந்தாலே போதும். ஆனால், இளநிலை, முதுநிலை பட்டதாரிகள், ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் உட்பட 572 பேர் விண்ணப்பித்திருந்தனர்.


தொடர்ந்து ரிஷிவந்தியம் அடுத்த பகண்டைகூட்ரோட்டில் உள்ள பி.டி.ஓ., அலுவலகத்தில் நேர்க்காணல் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக விண்ணப்பித்த பெண்கள், கல்வி, வயது, ஜாதி, இருப்பிட சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள் அனைத்தும் தயாராக வைத்திருந்தனர்.


இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக நேர்காணல் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு திடீரென அறிவித்தது.


இதனால் நேர்காணலுக்கு தயாராக இருந்த பலரும் அதிருப்தியடைந்தனர்.தகவல் கிடைக்கப்பெறாதவர்கள் நேற்று காலை 7:30 மணிக்கே பி.டி.ஓ., அலுவலகத்திற்கு சான்றிதழ்களுடன் வந்தனர்.


 அலுவலக தகவல் பலகையில் ஒட்டபட்டிருந்த அறிவிப்பு மற்றும் வெளியே வைக்கப்பட்டிருந்த பேனரை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.


இதேபோல், கடந்த 2019ம் ஆண்டு சத்துணவு பணிக்கான காலிப்பணியிடம் வெளியிடப்பட்டு, நேர்க்காணலும் நடந்த முடிந்த நிலையில் பணி ஆணை வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது இரண்டாவது முறையாக மறு தேதி குறிப்பிடப்படாமல் நேர்க்காணல் நிறுத்தப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பின்றி வருமானமில்லாமல் தவிக்கும் பலர், அரசு பணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆர்வத்துடன் விண்ணப்பித்த நிலையில், அரசின் திடீர் அறிவிப்பால் அதிருப்தியடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment