தோனி மீதான அன்பை வெளிப்படுத்த ரூ1.50 லட்சம் செலவில் வீட்டை மஞ்சள் நிறத்தில் மாற்றிய ரசிகர் - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, October 13, 2020

தோனி மீதான அன்பை வெளிப்படுத்த ரூ1.50 லட்சம் செலவில் வீட்டை மஞ்சள் நிறத்தில் மாற்றிய ரசிகர்

 தோனி மீதான அன்பை வெளிப்படுத்த ரூ1.50 லட்சம் செலவில் வீட்டை மஞ்சள் நிறத்தில் மாற்றிய ரசிகர்


ராமநத்தம் அருகே தோனி ரசிகர் தனது வீட்டு சுவரை மஞ்சள் நிறத்துக்கு மாற்றி, தோனியின் ஓவியங்களை வரைந்துள்ளார்.கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே அரங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபிகிருஷ்ணன்.


 துபாயில் உள்ள ஆன்லைன் டிரேடிங் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். தீவிர கிரிக்கெட் ரசிகரான கோபிகிருஷ்ணன் கிரிக்கெட் வீரர் தோனி மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார். 


டோனி விளையாடும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் ஆர்வத்தோடு கண்டுகளித்த கோபிகிருஷ்ணன் தற்போது விடுமுறைக்காக தனது சொந்த கிராமத்துக்கு வந்துள்ளார்.


இந்நிலையில் தோனி மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தும் விதமாக ஒன்றரை லட்சத்திற்கும் மேல் செலவு செய்து சிஎஸ்கே அணியின் நிறமான மஞ்சள் நிறத்தை தனது வீடு முழுமைக்கும் வண்ணம் பூசிய தோடு, தோனி படத்தையும் சுவரில் வரைந்துள்ளார். 


வீட்டின் முகப்பு பகுதியில் ஹோம் ஆப் தோனி ஃபேன் என்ற வாசகமும், சிஎஸ்கே அணியில் லோகாவான சிங்கம் படத்தை பக்கவாட்டிலும் வரைந்திருக்கிறார். எழுதப்பட்டுள்ளது. 


தோனிக்காக மாற்றி அமைக்கப்பட்ட இந்த வீட்டினை சுற்றுவட்டார கிராம மக்கள் பார்த்துவிட்டு செல்கின்றனர்.

No comments:

Post a Comment