விபத்தில் ஆசிரியை இறப்பு கணவருக்கு ரூ.16.52 லட்சம் - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, October 11, 2020

விபத்தில் ஆசிரியை இறப்பு கணவருக்கு ரூ.16.52 லட்சம்

 விபத்தில் ஆசிரியை இறப்பு கணவருக்கு ரூ.16.52 லட்சம்


விபத்தில் உயிரிழந்த தனியார் பள்ளி ஆசிரியையின் கணவருக்கு, 16.52 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.


சென்னையை அடுத்த பட்டாபிராமைச் சேர்ந்தவர் வரலட்சமி, 25. தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார். 2016 டிசம்பரில், வண்டலுாரில் இருந்து கேளம்பாக்கத்திற்கு பைக்கில், பின்புறம் அமர்ந்து சென்றுள்ளார். 


அப்போது, அதிவேகமாகவும், அஜாக்கிரதை யாகவும் சென்ற அந்த பைக், கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த வரலட்சமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்


இந்நிலையில், தன் மனைவி இறப்பிற்கு இழப்பீடு கோரி, வரலட்சுமியின் கணவர் பிரபு, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். 


இந்த வழக்கு விசாரணை நீதிபதி பி.ரேவதி முன் நடந்து வந்தது. அதன் பின், 'மனுதாரரின் மனைவி இறப்பிற்கு, பைக்கை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கியதே காரணம்.


எனவே, மனுதாரருக்கு இழப்பீடாக, 16.52 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு, 7.5 சதவீதம் வட்டியுடன், ஐ.சி.ஐ.சி.ஐ., லம்பார்டு ஜெனரல் இன்சுரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்' என, நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment