விடுமுறையை பயனுள்ளதாக்க விவசாயம் பழகும் குழந்தைகள் - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, October 11, 2020

விடுமுறையை பயனுள்ளதாக்க விவசாயம் பழகும் குழந்தைகள்

 விடுமுறையை பயனுள்ளதாக்க விவசாயம் பழகும் குழந்தைகள்


பல மாத விடுமுறையை பயனுள்ளதாக்க வேண்டும் என, குழந்தைகளுக்கு விவசாயம் கற்று தருவதில், கிராமப்புற பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, மார்ச் மாதம் துவங்கி, தற்போது வரை, பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன. 


பல மாத விடுமுறையை, மொபைல் போன், கணினி, வீடியோ கேம், 'டிவி' என, பொழுதை கழித்தபடி, நகர்ப்புறங்களில் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும் குழந்தைகள் வீட்டில் முடங்கி உள்ளனர்.


ஆனால், கும்மிடிப்பூண்டி அருகே, கும்புளி கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர், தனியார் பள்ளியில் பயிலும், இரு பெண் குழந்தைகளுக்கு, விவசாயம் பழகி வருகிறார்.குழந்தைகளை வீணடிக்காமல், விவசாயத்தின் அவசியத்தை உணர்த்தி, அதை அவர்கள் பழக வேண்டும் என்ற பெற்றோரின் எண்ணம் பாராட்டுக்கு உரியது என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

1 comment: