ஆசிரியர்கள், ஊழியர்கள் 18வது நாளாக தொடர் போராட்டம் - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, October 22, 2020

ஆசிரியர்கள், ஊழியர்கள் 18வது நாளாக தொடர் போராட்டம்

 ஆசிரியர்கள், ஊழியர்கள் 18வது நாளாக தொடர் போராட்டம்


அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், ஊழியர்கள் 18வது நாளாக நேற்று தர்ணா நடத்தினர்.கடந்த 11 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள சம்பளம், ஓய்வூதியம் ஆகியவற்றை உடனடியாக வழங்க வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


அவர்கள் நேற்று, பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் திரண்டனர். அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பின் கவுரவத் தலைவர் சேஷாச்சலம் தலைமையில், கோரிக்கை அட்டைகளை ஏந்தி 18வது நாளாக தர்ணாவை தொடர்ந்தனர்


.கூட்டமைப்பின் கவுரவத் தலைவர் சேஷாச்சலம் கூறும்போது, 'அரசுக்கும், பள்ளி நிர்வாகங்களுக்கும் இடையிலான பிரச்னையில் ஆசிரியர்களும், ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


முதல்வர், கல்வி அமைச்சர் ஆகியோரை சந்தித்து, சம்பளம் வழங்க வலியுறுத்தினோம். தலைமைச் செயலர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளையும் அழைத்து பேசுவதாக முதல்வர் உறுதியளித்துள்ளார். 


சம்பளம் கிடைக்காவிட்டால், வரும் 26ம் தேதியன்று கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்' என்றார்.

No comments:

Post a Comment