அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கைக்கு அழைப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, October 22, 2020

அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கைக்கு அழைப்பு

 அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கைக்கு அழைப்பு


நாமக்கல்: கொல்லிமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (பழங்குடி இன மக்களுக்கு முன்னுரிமை) உள்ள தொழிற் பிரிவுகளுக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி, பிளஸ் 1 மற்றும் பிளஸ்2 தேர்ச்சி அல்லது தோல்வி அல்லது ஏதாவது ஒரு டிகிரி, டிப்ளமோ பெற்ற மாணவ, மாணவியர்களிடம் இருந்து www.skilltraining.tn.gov.in என்ற ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


இரண்டு ஆண்டு படிப்பாக பிட்டர், ஓராண்டு படிப்பாக மெக்கானிக் டீசல் தொழிற்பிரிவுகள் காலியாக உள்ளன. பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசம், மாதம், 500 ரூபாய் உதவித்தொகை, இலவச லேப்டாப், சைக்கிள், பாடப்புத்தகங்கள், சீருடை, வரைபடக் கருவிகள் மற்றும் பஸ் பாஸ் ஆகியவை வழங்கப்படுகின்றன.


 விபரங்களுக்கு, 04286 ~247472, 84895 55073, 94990 55846, 98433 28575 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment