இலவச நீட் பயிற்சி அளிக்க தனியார் நிறுவனங்களுக்கு அரசு அழைப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, October 22, 2020

இலவச நீட் பயிற்சி அளிக்க தனியார் நிறுவனங்களுக்கு அரசு அழைப்பு

 இலவச நீட் பயிற்சி அளிக்க தனியார் நிறுவனங்களுக்கு அரசு அழைப்பு


பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று கூறியதாவது:


நீட் தேர்வுக்காக 412 மையங்களில் 6 ஆயிரத்து 618 மாணவர்களுக்கு அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் அரசுப் பள்ளியைச் சேர்ந்த 747 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 


பெரியகுளத்தைச் சேர்ந்த ஜீவித் குமார் என்ற மாணவர், இந்தியாவிலேயே அரசுப் பள்ளியில் படித்து 664 மதிப்பெண்ணை எடுத்து முதலிடம் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.


தமிழகத்தில் 412 நீட் பயிற்சி மையங்களை உருவாக்கவும், கட்டமைப்பு வசதி செய்யவும் கடந்த இரு ஆண்டுகளில் ரூ.57 லட்சம் செலவு செய்யப்பட்டது. அதன்பின்னர், நீட் பயிற்சிக்காக தனியார் நிறுவனத்துக்கு ஒரு ரூபாய்கூட அரசு வழங்குவதில்லை.


 மாணவர்களுக்கும் செலவு செய்வதில்லை. தகுதி வாய்ந்த தனியார் நிறுவனம் இலவசமாக நீட் பயிற்சி அளிக்க முன்வந்தாலும், அதனை ஏற்கத் தயாராக இருக்கிறோம். இதுதான் அரசின் கொள்கை. 


அரசின் நிதியை இதற்கென செலவிடும்போது, டெண்டர் உள்ளிட்ட நடைமுறைகள் மற்றும் ஏன் இதற்காக செலவிட்டார்கள் என்பது போன்ற கேள்விகள் எழும் வாய்ப்புகள் உள்ளன.


நடப்பு ஆண்டு நீட் பயிற்சி அளிப்பதற்கான பட்டியல் டிசம்பர் மாத இறுதிக்குள் தயார் செய்யப்படும். அதன் பின்னர் மாணவர்களை தேர்வு செய்து, பயிற்சி அளிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment