இன்ஜினியரிங் உள்ளிட்ட எந்த பட்டப் படிப்புக்கும் மாணவர் சேர்க்கைக்கு நுழைவு தேர்வு கூடாது - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, October 22, 2020

இன்ஜினியரிங் உள்ளிட்ட எந்த பட்டப் படிப்புக்கும் மாணவர் சேர்க்கைக்கு நுழைவு தேர்வு கூடாது

 இன்ஜினியரிங் உள்ளிட்ட எந்த பட்டப் படிப்புக்கும் மாணவர் சேர்க்கைக்கு நுழைவு தேர்வு கூடாது


மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களிலும் அமல் படுத்துவதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.


 இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான நிர்வாக சீர்திருத்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பல்கலைக் கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. 


மேலும், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதால், அனைத்து தரப்பினரின் கருத்துகளின் அடிப்படையில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் என்றும் பல்கலைக் கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. 


இது குறித்து அனைத்து பல்கலைக் கழகத்துக்கும் பல்கலைக் கழக மானியக் குழு கடிதம் அனுப்பியுள்ளது.


இதையடுத்து, தமிழக அரசின் உயர் கல்வித்துறையின் சார்பில் புதிய கல்விக் கொள்கை மீதான கருத்துரைகள், பரிந்துரைகள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், பல்வேறு பரிந்துரைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.பொறியியல் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்காக தமிழகத்தில் நடைமுறையில் உள்ள பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களை சேர்ப்பதை ரத்து செய்துவிட்டு, நுழைவுத் தேர்வு என்ற நடைமுறையை கொண்டு வந்தால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். 


அதனால் பொறியியல் படிப்புக்கு நுழைவுத் தேர்வு கூடாது என்றும் அந்த கடிதத்தில் தமிழக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளதாக உயர்கல்வி துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment