'குரூப்~1' தேர்வு எழுத அனுமதி புதிய பட்டதாரிகள் எதிர்பார்ப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, October 22, 2020

'குரூப்~1' தேர்வு எழுத அனுமதி புதிய பட்டதாரிகள் எதிர்பார்ப்பு

 'குரூப்~1'  தேர்வு எழுத அனுமதி புதிய பட்டதாரிகள் எதிர்பார்ப்பு


நடப்பு கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் டி.என்.பி.எஸ்.சி., குரூப்~1 தேர்வில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்குமா என, எதிர்பார்த்துள்ளனர்.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.,) ஆண்டுதோறும் துணை கலெக்டர், டி.எஸ்.பி., வணிகவரித்துறை உதவி கமிஷனர், கூட்டுறவு சங்க துணை பதிவாளர் போன்ற, 'குரூப்~1' தகுதியிலான காலி பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தி வருகிறது.


 இந்தாண்டுக்கான தேர்வு குறித்து, ஜன., 20ம் தேதி டி.என்.பி.எஸ்.சி., அறிக்கை வெளியிட்டது. மொத்தம், 69 காலி பணியிடங்களை நிரப்ப விண்ணப்ப பதிவுக்கு அறிக்கை வெளியிடப்பட்டது.


விண்ணப்ப பதிவுக்கான அறிவிக்கை நாளான ஜன., 20ம் தேதியில், நிர்ணயிக்கப்பட்ட கல்வி தகுதியான ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு கடந்த பிப்., 19ம் தேதி வரை முதன்மை எழுத்து தேர்வு எழுத இணையதளம் மூலம் விண்ணப்ப பதிவு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது.


கடந்த ஏப்., 5ம் தேதி குரூப்~1 தேர்வுக்கான முதன்மை எழுத்து தேர்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா காரணமாக, மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.


நடப்பாண்டு தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் கூறுகையில், 'தற்போது குரூப்~1 தேர்வு அடுத்தாண்டு ஜன., மாதம் நடத்துவதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது. '


இதனால், இந்தாண்டு கல்வி தகுதி பெற்றுள்ள மாணவர்களும் தேர்வு எழுத ஏதுவாக விண்ணப்ப பதிவு செய்ய டி.என்.பி.எஸ்.சி., முன் வர வேண்டும்' என்றனர்.

No comments:

Post a Comment