சீருடைப் பணிக்கு முன்னாள்படைவீரர் விண்ணப்பிக்கலாம் - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, October 22, 2020

சீருடைப் பணிக்கு முன்னாள்படைவீரர் விண்ணப்பிக்கலாம்

 சீருடைப் பணிக்கு முன்னாள்படைவீரர் விண்ணப்பிக்கலாம்


ராமநாதபுரத்தில் தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள், இரண்டாம்நிலைகாவலர், சிறைக்காவலர் தீயணைப்பு வீரர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 


தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுவாரியம்மூலம் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியுள்ள முன்னாள் படைவீரர்களுக்கு 5 சதவீதம் சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.


ஆகையால் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தபத்தாம் வகுப்பு தேர்ச்சிபெற்ற 45 வயதிற்குள்ள முன்னாள் படை வீரர்கள்பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். 


தகுதியுள்ளவர்கள் 'www.tnusrbonline.org' என்ற இணையதளவழியாக அக்.,26க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment