நேவல் ஆர்க்கிடெக்சர் பி.டெக்.,படித்தால் அதிக வேலைவாய்ப்பு
நேவல் ஆர்க்கிடெக்சர் அன்ட் ஷிப்பிங்' பி.டெக்., படிப்பு முடித்தவர்களுக்கு, இந்திய கடற்படை மற்றும் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்ற சிறந்த வாய்ப்புகள் உள்ளன.
கடல் வாகனங்களின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தை பற்றிய படிப்பு தான் 'நேவல் ஆர்க்கிடெக்சர் அன்ட் ஷிப்பிங்' பி.டெக்., படிப்பு. இப்போது வான்வழிப் போக்குவரத்துக்கு இணையாக கடல் வழிப் போக்குவரத்தும் வளர்ச்சியடைந்து வருவதால் இந்தத்துறை தற்போது வளர்ச்சி அடைந்த துறையாகவும், விரும்பத்தக்க துறையாகவும் உள்ளது.
இந்திய கடற்படையிலும் இந்தப் படிப்புக்கான தேவை அதிக அளவிலேயே உள்ளது.ஆண், பெண் என எந்த வேறுபாடும் இன்றி, இப்படிப்பை படிக்கலாம்.
பிளஸ் 2 மதிப்பெண் மற்றும் அந்தந்த கல்வி நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத்தேர்வில், எடுக்கும் மதிப்பெண் அடிப்படையாக கொண்டு இதற்கான சேர்க்கை நடக்கிறது.
இந்தியாவில் கப்பல் கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் பல நிறுவனங்களில், இப்படிப்பை முடித்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு உள்ளது. வெளிநாடுகளிலும் பணியாற்ற அதிக வாய்ப்புகள் உள்ளன. பல்வேறு பல்கலை, கல்லூரிகளில் இப்படிப்பு வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment