அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி நவ.1ம் தேதி முதல் தொடக்கம்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி நவம்பர் 1ம் தேதி முதல் தொடங்கும் என பள்ளி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 2 ஆண்டுகளாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 2019ல் சுமார் 12 ஆயிரம் பேர் பயிற்சி பெற்று நீட் தேர்வில் பங்கேற்றனர். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வில் பங்கேற்க 7 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயிற்சி பெற்றனர்.
அவர்களில் 6,692 பேர்தான் தேர்வில் பங்கேற்றனர்.
கடந்த ஆண்டு பயிற்சி பெற்றவர்களை விட இந்த ஆண்டு பயிற்சி பெற்று தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை கணிசமாக கூடியுள்ளது.
அதனால், 2021 நீட் தேர்வுக்கான பயிற்சியை கடந்த ஆண்டு போலவே நடத்த பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதையடுத்து, ஆர்வமுள்ள மாணவர்களை பயிற்சியில் சேர்க்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment